Latestமலேசியா

MH370 தேடுதல்: 7,236 சதுர கிலோ மீட்டர் கடலடிப் பகுதி ஆய்வில் தடயம் ஏதும் சிக்கவில்லை

கோலாலம்பூர், ஜனவரி-21-மாயமான MH370 விமானத்தைக் கண்டுபிடிக்க இந்தியப் பெருங்கடலில் அண்மையில் தொடங்கிய தேடுதல் பணிகள் இதுவரை 7,200 சதுர கிலோ மீட்டர் கடலடிப் பகுதியைக் கடந்துள்ளன.

ஜனவரி 6 முதல் 15 வரை 3 தானியங்கி நீர்மூழ்கி வாகனங்கள் அதில் பயன்படுத்தப்பட்டன.

ஆனால் இதுவரை முக்கிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Armada 8605 கப்பல், மோசமான வானிலை காரணமாக ஜனவரி 15 அன்று தேடுதலை நிறுத்தியது.

இந்நிலையில் துணைக்கோள தரவின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ‘7வது வளைவு’ வழித்தடத்தில் தேடுதல் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘கண்டுபிடித்தால் மட்டுமே கட்டணம்’ என்ற போக்குவரத்து அமைச்சின் ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவைச் சேர்ந்த Ocean Infinity நிறுவனம் இந்தத் தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளது.

2014 மார்ச் மாதம் 239 பேருடன் காணாமல் போன MH370, உலக விமானப் பாதுகாப்பின் மிகப்பெரிய மர்மமாக நீடிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!