
கோலாலாம்பூர், டிசம்பர்-3 – மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை தேடும் நடவடிக்கை டிசம்பர் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த Ocean Infinity நிறுவனம் இந்த தேடலை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.
“கண்டுபிடித்தால் மட்டுமே கட்டணம்” என்ற ஒப்பந்தத்தின் கீழ், விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே $70 மில்லியன் வழங்கப்படும்”
இந்தத் தேடல், இந்தியப் பெருங்கடலில் 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நடைபெறும்.
55 நாட்கள் இடைவிடாமல் தேடுதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MH370 விமானம் 2014 மார்ச் 8-ஆம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு புறப்பட்டபோது காணாமல் போனது; அதில் 239 பயணிகள் இருந்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிம்மதி அளிக்க மலேசிய அரசு உறுதியாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது.
MH370 காணாமல் போனது உலக வான் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக உள்ளது.



