Latestமலேசியா

MISI திட்டம் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை உருமாற்றும்;

கோலாலாம்பூர், அக்டோபர்-30,

மனிதவள அமைச்சான KESUMA-வின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் MISI தொழில் திறன் பயிற்சியில், இதுவரை சுமார் 5,000 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

இவ்வெற்றியின் தொடர்ச்சியாக, MISI 2.0 திட்டத்தை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

அதன் கீழ் இவ்வாண்டு 1,000 இந்திய இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியை வழங்கி, உயர் வருமானம் பெறும் துறைகளில் வேலைக்கமர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி இந்திய இளைஞர்களின் வாழ்க்கையில் உருமாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது; எனவே இது தொடரப்படும் என்றார் அவர்.

இதனிடையே, மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் எந்தவொரு பாகுபாடுமின்றி ‘அனைவருக்குமான அமைச்சராக’ தாம் பணியாற்றி வருவதாக ஸ்டீவன் சிம் சொன்னார்.

“இனவாதத்தை வெறுப்பவன் நான்; பிற்போக்குத்தனமான அந்த யுக்தி என்னிடத்தில் வேலைக்கு ஆகாது” என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

குறிப்பாக தொழிலாளர்கள் விஷயத்தில் பாரபட்சமின்றி அனைவருக்கும் சேவையை வழங்கி வருவதாக, தமிழ் ஊடகங்களுடனான தீபாவளி சிறப்பு விருந்துபசரிப்பில் அமைச்சர் சொன்னார்.

தமிழ் ஊடகங்கள், மடானி அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் மக்களிடத்தில் கொண்டுச் சேர்க்க என்றுமே தவறியதில்லை.

பல்வேறு சிரமங்கள், சவால்களுக்கு மத்தியில் அவர்கள் அப்பணியை திறம்பட மேற்கொண்டு வருவதாகவும் ஸ்டீவன் சிம் பாராட்டினார்.

அரசாங்கத்திற்கும் இந்தியர்களுக்கும் இடையில் தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து நல்லதொரு பாலமாக விளங்குவர் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!