
கோலாலம்பூர், டிசம்பர் 11 – நேற்றிரவு, கோலாலம்பூர் ‘Mont Kiara’ குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வித குற்றச்செயல்களும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
இச்சம்பவத்தில் 38 வயதுடைய ஆடவர் தீயிக்கிரையானதைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
எனவே போலீசார் இந்த வழக்கை திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தி, இறந்தவரின் உடலைத் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர் என்று பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைவர் Assistant Commissioner Hoo Chang Hook தெரிவித்ததார்.
மேலும் உயிரிழந்தவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தனியாக வாழ்ந்து வந்தவர் என்றும் கடந்த சனிக்கிழமைதான் குடும்பதாரைத் தொடர்புக்கொண்டார் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தீ விபத்துக்கு ஆளான அவர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார் என்பதும் உறுதிச்செய்யப்பட்டுள்ளது.



