Latestமலேசியா

Mpox குரங்கு அம்மை வைரஸ் பரவலைத் தடுக்க, தடுப்பூசிகளையும் மருந்துகளையும் மலேசிய பெறும் – ஜூல்கிஃப்லி

கோலாலம்பூர், செப்டம்பர் 2 – Covid-19 Asean Response Fund மூலம் Tecovirimat எனும் Mpox குரங்கு அம்மை வைரஸ் தடுப்பு மருந்துகளையும், MVA-BN எனும் தடுப்பூசிகளையும், மலேசியா விரைவில் பெறும் எனச் சுகாதார அமைச்சர் ஜூல்கிஃப்லி அஹம்மத் தெரிவித்திருக்கிறார்.

Tecovirimat எனும் நோய் தடுப்பு மருந்து கடுமையான Mpox தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் என்றார், அவர்.

அதேபோல MVA-BN Mpox எனும் தடுப்பூசி, மருத்துவ நிபுணர்களின் பரிசோதனை மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தனது X தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே, இந்த MVA-BN தடுப்பூசி சுகாதார பணியாளர்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் நெருங்கிய தொடர்புகள் உட்பட அதிக ஆபத்தில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு மட்டும் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!