
கோலாலம்பூர், ஜூலை 29 – இன்று காலையில், MRT புத்ராஜெயா பாதை சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளன என்று ரேப்பிட் ரயில் நிறுவனம் (Rapid Rail Sdn Bhd) அறிவித்துள்ளது.
UPM MRT நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரைத் தொடர்ந்து அதன் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று Rapid Rail நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.
இந்நிலையில் தற்காலிக மாற்று ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்ட கால வரைவு வரை பேருந்து சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பயண அட்டவணை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கூறிய ரேப்பிட் நிறுவனம் பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.
UPM மற்றும் Taman Equine நிலையங்களுக்கு இடையில், ரயில் தண்டவாளத்தில் இருந்த அடையாளம் காணப்படாத குப்பைகளால் ரயில் போக்குவரத்து சேவை தடைபட்டது குறிப்பிடத்தக்கது.