Latestமலேசியா

National Geographic கனவை எட்ட புகைப்படக் கலைஞர் தினேஸுக்கு ம.இ.கா RM15,000 நிதியுதவி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – National Geographic அமைப்பின், கென்யாவின் மாசாய் மாரா தேசிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை புகைப்படம் வாயிலாக ஆவணப்படுத்தும் திட்டத்தின் கனவை நிறைவேற்ற மலேசிய புகைப்படக் கலைஞர் தினேஸ் ஶ்ரீதரனுக்கு ம.இ.கா 15 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கி ஆதரவளித்துள்ளது.

சவாலான இந்த கனவை நனவாக்க எல்லா வகையான ஆயுத்தங்களையும் செய்து வரும் தினேஸ், இவ்வாரம் கென்யா புறப்படவிருக்கின்றார். இதனிடையே, 15 ஆயிரம் ரிங்கிட்டுக்கான காசோலையை எடுத்து வழங்கிய ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன், தினேஷின் இந்த பயணம் மலேசியர்களுக்கான ஒரு பெருமையான தருணம் என்றார்.

அனைத்துலக ரீதியில் இளைஞர்கள் குறிப்பாக இந்திய இளைஞர்கள் சாதிக்க துடிக்கின்ற பட்சத்தில் கைகொடுத்து தூக்கி விடும் கடப்பாட்டை ம.இ.கா கொண்டிருப்பதாக அவர் கூறினார்.தினேஸின் இந்த சாதனை குறித்து விக்கினேஸ்வரனின் கவனத்திற்கு செனட்டர் டத்தோ சிவராஜ் கொண்டுச் சென்ற நிலையில், மூன்றே மணி நேரத்தில் டான் ஶ்ரீ தினேஸை சந்திக்க அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டு நிதியுதவியும் வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!