கோலாலம்பூர், நவம்பர்-13 – NKVE எனப்படும் புதியக் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில் நேற்று காலை கனமழைக்குப் பிறகு நில அமிழ்வு ஏற்பட்ட இடத்தில், இரவுப் பகலாக பழுதுப் பார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவை நிறைவுப் பெற்று, அப்பகுதி சாலைப் பயனர்களுக்குப் பாதுகாப்பானதே என உத்தரவாதம் அளிக்கப்பட்டதும், போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ள இடப்புற பாதை மீண்டும் திறக்கப்படும்.
அதுவரை, அப்பகுதியில் பயணிக்கும் வாகனமோட்டிகள் கவனமாகவும் சாலை அறிவிப்புப் பலகைகளைப் பின்பற்றியும் நடக்குமாறு PLUS நிறுவனம் கேட்டுக் கொண்டது.
தெற்கு நோக்கிச் செல்லும் பாதையின் 18.6-வது கிலோ மீட்டரில், கோத்தா டாமான்சாராவிலிருந்து டாமான்சாரா செல்லும் வழியின் அவசர பாதையில் நேற்று அந்த திடீர் பள்ளம் ஏற்பட்டது.
எனினும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.