
கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – 10 வது ஆண்டின் வெற்றி விழாவை சிறப்பாக கொண்டாடிய மலேசியாவின் பிரபல நிறுவனமான ‘நுனேச்சர்’ (Nunature), கடந்த பத்தாண்டுகளில் எதிர்கொண்ட வலிமை, வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களின் உறுதியான ஆதரவை நினைவுகூர்ந்துள்ளது.
தரமான மற்றும் மலிவு விலையில், ஊட்டச்சத்து பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், ஒப்பனை மற்றும் தோல் பராமரிப்பு பொருட்களை விநியோகம் செய்து வரும் இந்நிறுவனம், இந்தச் சிறப்பு தருணத்தை கொண்டாடும் வகையில், ‘மலேசியாக்கூ’ ஒற்றுமையை வளர்ப்போம் எனும் தேசப்பாடலை வெளியிட்டிருக்கிறது.
இந்தப் பாடல் காட்சிகளில், குழந்தைகள், இளைஞர்கள், குடும்பங்கள் மற்றும் மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்தின் ‘Pink Unity’ குழுவினர்களும் பங்கேற்றுள்ளனர்.
மேலும், Nunature-ன் முக்கிய வெளியீடான முடி உதிர்வை தடுக்கும் ஷாம்புவை இவ்வேளையில் நினைவு கூறும் வகையில், தேசிய புற்றுநோய் சங்கத்தின் ஆதரவில் Nunature குழுமம், மலேசியாவின் கலாச்சாரத்தை நினைவுகூறும் வகையில், ‘பாத்திக்’ துண்டினையும் வெளியீடு செய்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த ஜூலை 30 முதல், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை, ‘சன்வெய் பிரமிட்டில்’ (Sunway Pyramid), “Nurture the Harmony” எனும் கருப்பொருளில், Nunature இன் 10 ஆண்டு கால காட்சி அமைப்புகள், மர இலைகளில் நன்றி எழுதுதல் மற்றும் மறுசுழற்சியின் வழி புதிய உருவாக்கம் போன்ற உள்ளடக்கங்களைக் கொண்ட நிகழ்வுகள் மலேசிய வாட்சன் குழுமத்தின் இயக்குனர் டானி ஹோ தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆண்டு விழாவின் முக்கிய பகுதியாக சிறப்பு பதிப்பு ஷாம்பு விற்பனையின் ஒரு பகுதி Pink Unity குழுவிற்கு நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
இந்நிறுவனத்தின் தயாரிப்புகள், தூய்மை, தற்காப்பு மற்றும் நிலைத்துவத்தைக் கொண்டவை என்றும் எதிர்காலத்தில், ‘ஹலால்’ சான்று பெற்ற பொருட்களை வெளியிட திட்டம் கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.