
தெலங்கானா, ஆகஸ்ட் 26 – கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி, தெலங்கானாவில், OTT இல் ‘சீரியல்’ கொலைகளை பார்த்து வளர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன், 10 வயது சிறுமியை சரமாரியாக வெட்டியா சம்பவம் அப்பகுதி மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அச்சிறுமியின் தந்தை, குழந்தைகளுக்கு உணவு எடுத்து வரும் பொழுது, தனது மகள் வெளிப்புறமாக பூட்டப்பட்ட வீட்டில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்நிலையில், சிறப்பு குற்றப்புலனாய்வு துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணையில், ‘சீரியல்’ கொலை படங்களை அதிகம் விரும்பி பார்க்கும் 10 வகுப்பு படித்து வந்த மாணவன்தான் இந்த கொடூர காரியத்தை செய்தான் என்று கண்டறியப்பட்டது.
பக்கத்து மாடியில் வசித்து வந்த அவன் கிரிக்கெட் பேட் திருடும் நோக்கில் சிறுமியின் வீட்டில் குதித்துள்ளார் என்றும் அவன் திருடுவதை யாரவது பார்த்து விட்டால் மிரட்டுவதற்கு கத்தியை எடுத்து சென்றான் என்றும் அறியப்படுகின்றது.
ஆனால் திருடுவதை நேரில் பார்த்த சிறுமி தன் தம்பியின் பொருளை திருடினால் தமது தந்தையிடம் சொல்வேன் என்று சட்டையை பிடித்து மிரட்டியுள்ள நிலையில், அந்த இளைஞன் கண்களை மூடி கொண்டு அச்சிறுமியை சரமாரியாக வெட்டியுள்ளான்.
மேலும் தேர்ச்சி பெற்ற கொலையாளியைப் போன்று அக்குற்றத்தை மறைக்க அவன் பல்வேறு யுக்திகளையும் கையாண்டிருப்பது அறியப்படுகின்றது.