Latestவிளையாட்டு

pமெசியின் கொல்கத்தா வருகை; அரங்கத்தில் வெடித்த கலவரம் – இரசிகர்களின் பணம் திரும்ப்த்தரப்படும்

கொல்கத்தா, டிசம்பர்-14 – உலகக் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெசியின் GOAT India Tour 2025 இந்தியப் பயணத்தின் தொடக்கமே பெரும் இரகளையில் முடிந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெரிய மைதானத்தில் மெசியை நேரில் காண தீவிர இரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், அரங்க நிர்வாக குறைபாடு காரணமாக கலவரம் வெடித்தது.

அமைச்சர்கள், அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், ஊடகங்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் மெசியை சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொண்டனர்.

இதனால், ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் தங்கள் அபிமான நட்சத்திரத்தின் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என இரசிகர்கள் கொதித்துப்போயினர்.

ஆனால், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் பிரமுகர்களோடு மெசியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் autograph வாங்குவதிலும் மும்முரம் காட்டினர்.

மெசி அரங்கிலிருந்தது வெறும் 22 நிமிடங்கள் மட்டுமே; அதில் 10 நிமிடங்கள் இரசிகர்களை நோக்கி கையசைத்தார். அவ்வளவுதான்…

மைதானத்தில் கூட்ட நெரிசல் அதிகமானதால் மெசி, லூயிஸ் சுவாரேஸ்( Luis Suarez) உள்ளிட்ட 3 வீரர்களும் அசௌகரியமான சூழலில் முன்கூட்டியே திடலை விட்டு வெளியேறினர்.

இதனால் மேலும் கோபமடைந்த இரசிகர்கள், இருக்கைகள், பாட்டில்கள் போன்றவற்றை வீசியெறிந்தனர்.

மைதானத்திற்குள் நுழைந்து போஸ்டர் உள்ளிட்ட அரங்க சொத்துகளைச் சேதப்படுத்தினர்.

கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பாட்டாளர்களும் பணியிலிருந்தவர்களும் திணறினர்.

இந்நிலையில், நடந்த சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மெசி மற்றும் இரசிகர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

இந்த குழறுபடிகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்தார்.

இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா (Satadru Dutta) விசாரணைக்காகக் கைதாகியுள்ளார்.

இதனிடையே ஏமாற்றமடைந்த இரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பிப் தரப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!