
கோலாலம்பூர், ஜனவரி-3 – அரச மலேசியப் போலீஸ் படையின் MyBayar வசதியைத் தவறாக பயன்படுத்தி மோசடி செய்த ஒரு கும்பலை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
MyBayar PDRM அபராத கட்டண சேவையைப் போல தோற்றமளிக்கும் போலி link இணைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் மற்ற செயலிகள் மூலம் அனுப்பப்படுகின்றன.
இந்த இணைப்புகளை அழுத்தும் பொது மக்களின் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்களை திருடுவதே மோசடியாளர்களின் வேலை.
எனவே, MyBayar PDRM எந்த நிலையிலும் சீரற்ற முறையில் கட்டண இணைப்புகளை அனுப்பாது என போலீஸார் மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளனர்.
இம்மோசடியில் தொடர்புடையவர்களை கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ PDRM தளங்கள் மூலமே தகவல்களை உறுதிப்படுத்தவும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.



