
காங்கார், ஜனவரி 21 – PERKESO-க்கு போலி மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்து, 255,000 ரிங்கிட் மதிப்பிலான மாதாந்திர ஓய்வூதியம் பெற முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
PERKESO ஓய்வூதிய விண்ணப்பங்களைச் செய்துகொடுத்த ஒரு ஆண் முகவர் உட்பட 50 முதல் 60 வயதிற்கிடையிலிருக்கும் ஆறு சந்தேகநபர்களையும் தடுப்பு காவலில் வைப்பதற்கு கங்கார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
SPRM தகவலின்படி, 2024 ஆம் ஆண்டு தனியார் துறையில் பணிபுரியும் ஐந்து சந்தேகநபர்கள், போலி மருத்துவ அறிக்கைகளை PERKESO-க்கு சமர்ப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களுக்கு உதவிய முகவர், 42,000 ரிங்கிட் தொகையை பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
PERKESO-வின் Anti-Fraud, Ethics and Integrity (AFEI) பிரிவு மற்றும் SPRM பெர்லிஸ் இணைந்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு SPRM சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



