
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-3-பெட்டாலிங் ஜெயாவில் உள்ள PJS1 தமிழ்ப் பள்ளியில், இன்று டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாக Smard Board விவேகப் பலகை அறிமுக விழா நடைபெற்றது.
இறைவாழ்த்துடன் காலை 11 மணிக்கு நிகழ்வுத் தொடங்கி, மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் Smard Board-டின் பயன்பாடு குறித்து நேரடி விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
Niata Furnitech நிறுவனத்தின் மேலாளர் முருகையா, Smard Board-டின் முக்கிய அம்சங்களையும் அதன் பயன்பாடுகளையும் அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, AI பல்லூடகக் காட்சியும் இடம்பெற்றது.
முக்கிய அம்சமாக, India Gate உணவகத்தின் நிறுவனர் சரவணன், பள்ளிக்காக 2 Smard Board பலகைகளை வழங்கினார்.
பள்ளி தலைமையாசிரியை ராஜேஸ்வரி சுப்பிரமணியம், சரவணன் மற்றும் அவரது துணைவியார் கீவராணிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
கடந்தாண்டு திட்டமிடப்பட்ட இம்முயற்சி இன்று வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்த சரவணன், கல்விக்கு உதவுவது மிகவும் முக்கியம் என்றார்
சரவணனின் உதவிக்கு நன்றித் தெரிவித்த தலைமையாசிரியை ராஜேஸ்வரி, இப்படிப் பல வர்த்தகர்கள் கல்விக்காக முன்வந்து உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Smard Board பங்களிப்பு, தங்களின் கற்றலை மேலும் எளிதாக்கும் மாணவர்கள் சிலரும் வணக்கம் மலேசியாவிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொக்ண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் நோக்கமே, கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இணைத்து, மாணவர்களின் கற்றலை மேலும் இரு வழி தொடர்புள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதாகும்.
248 மாணவர்கள் கொண்ட இந்த பள்ளியில், இந்த முயற்சி எதிர்கால கற்றல் முறைகளில் முக்கிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் கல்வி மற்றும் சமூக துறையைச் சேர்ந்த பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.



