Latestமலேசியா

PLKN 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் – காலிட் நோர்டின்

கோலாலம்பூர், ஜனவரி 19 – 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய சேவை பயிற்சி திட்டம் PLKN 3.0, தொடர் 1-இல் தேர்வு செய்யப்பட்ட 254 பயிற்சியாளர்கள், வருகையை முன்கூட்டியே உறுதிப்படுத்தாததன் காரணமாக பயிற்சி முகாம்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் (Datuk Seri Mohamed Khaled Nordin) தெரிவித்துள்ளார்.

பஹாங் பெக்கானிலுள்ள KEM 505 மற்றும் கோலாலம்பூர் முகாம்களில், அதிகமானோர் வருகை தந்ததால் இடம் பற்றாக்குறை பிரச்சனை உருவாகியுள்ளதாகவும்,குறிப்பாக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டபோதும் சிலர் வருகையை உறுதிப்படுத்தாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதென்றும் காலிட் நோர்டின் (Khaled Nordin) கூறினார்.

திருப்பி அனுப்பப்பட்ட பயிற்சியாளர்களின் போக்குவரத்து செலவுகளை அரசே ஏற்கும் என்றும், அவர்களுக்கு அடுத்த தொடரில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

முன்னதாக, KEM 505 பெக்கான் முகாமில் 556 பேர் மட்டுமே ஏற்கக்கூடிய நிலையில், 838 ஆண் பயிற்சியாளர்கள் வந்ததாகவும், அதில் 254 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக தேசிய சேவை பயிற்சி துறையான JLKN தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!