
திரெங்கானு, ஜனவரி 2 – Perikatan Nasional தலைவர் பதவியில் இருந்து தான் ஸ்ரீ முஹிடின் யாசின் விலகியதைத் தொடர்ந்து, அந்த கூட்டணியின் தலைமையை PAS ஏற்கும் என PAS தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் PAS சிறப்பு கூட்டத்தில் PN-க்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும், அந்த பதவி BERSATU தலைவருக்கு வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். PAS-இல் அரசியல்வாதிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் உட்பட பல தகுதியான வேட்பாளர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தான் தலைமைப் பொறுப்பை ஏற்கும் சாத்தியம் குறித்து பேசப்பட்டபோது, உடல்நல காரணமாக அது அடுத்த வார கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், PN தலைவர் கட்டாயமாக PAS-ஐச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அப்துல் ஹாடி விளக்கமளித்தார்.
முஹிடின் யாசின் பதவி விலகினாலும், PAS–BERSATU உறவு இன்னும் நல்ல நிலையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சட்டப்பூர்வ அறிக்கை (SD) விவகாரத்தில் மூன்று PAS சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாநில அரசியலமைப்பின் படி அவர்கள் ADUN பதவியையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.



