
கோலாலம்பூர்,நவம்பர்-3,
12 வயது சிறுவன் ஒருவன் ‘powerbank’ ஐ, திருடியதாக சந்தேகித்து அவனை அடித்த சம்பவத்தில், 49 முதல் 61 வயதிற்குட்பட்ட மூன்று ஆண்களைப் போலீசார் கைது செய்தனர்.
அச்சம்பவம் கோலாலம்பூரில் உள்ள மக்கள் வீட்டு திட்டம் (PPR) பகுதியில் அமைந்த உணவகத்தில் நடந்ததென்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ் தெரிவித்தார்.
அந்தத் தாக்குதலில் சிறுவனின் நெற்றியும் வாயும் சிறிதளவு காயமடைந்ததைத் தொடர்ந்து அவன் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது



