
புத்ராஜெயா, நவம்பர்-7,
PTPTN கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கான கடன் மறுசீரமைப்பு திட்டம், வரும் டிசம்பர் 15-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
இத்திட்டத்தின் மூலம், மாதாந்திர தவணைப் பணத்தை மாணவர்கள் அவர்களின் நிதி நிலைமையைப் பொருத்து மறுசீரமைக்கலாம்.
இச்சலுகை, 500 ரிங்கிட்டுக்கும் மேல் கடன் பாக்கி வைத்துள்ள வழக்கமான கடனாளிகளுக்கும் உஜ்ரா இஸ்லாமிய முறைப்படி கடன் பெற்றவர்களுக்கும் பொருந்தும்.
மொத்த பாக்கியில் 20 விழுக்காடு தொகை அல்லது குறைந்தது 500 ரிங்கிட்டைச் செலுத்தி, myPTPTN இணைய அகப்பக்கம் வாயிலாக அவர்கள் கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுவார்த்தைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பேச்சுவார்த்தை மூலம், உஜ்ராவுக்கு மாற்றுவது அல்லது கடன்களை ஒருங்கிணைக்கவும் கோரலாம்.
எனவே, மாணவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் கல்விக் கடன்களை சீராக செலுத்தி, எதிர்கால நிதி சவால்களைத் தவிர்க்கலாம் என PTPTN நினைவுறுத்தியுள்ளது.
மேல் தகவல்களை PTPTN-னின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் தெரிந்துகொள்ளலாம்.



