
கோலாலம்பூர், டிசம்பர்-2,
Public Bank வங்கியின் துணை நிறுவனமான Public Mutual, 2025 நவம்பர் 30-ல் முடிவடைந்த நிதியாண்டுக்கு, தனது 4 நிதிகளுக்காக RM71 மில்லியனுக்கும் அதிகமான இலாப இவு பகிர்வை அறிவித்துள்ளது.
Public Islamic Infrastructure Bond நிதிக்கு 1 யூனிட்டுக்கு 5 சென்னும், Public e-Enhanced Money Market நிதிக்கு 3.25 சென்னும், Public Far-East Dividend நிதிக்கு 1.5 சென்னும், Public Dividend Select நிதிக்கு 0.20 சென்னும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலீட்டாளர்கள், முதலீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட தகவலேடுகளை முழுமையாகப் படிக்க வேண்டும் என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 31 கிளைகளுடன் செயல்படும் Public Mutual, மலேசியாவின் மிகப்பெரிய தனியார் unit trust அறங்காப்பு நிதி நிறுவனமாகும்.
இது, 9 தனியார் ஓய்வூதியத் திட்டங்களின் நிதிகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட நிதிகளை நிர்வகிக்கிறது.



