PUSPAKOM-மில் சோதனை முடித்த வாகனங்களை மறுசோதனைக்கு உட்படுத்தும் சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை

ஷா ஆலாம், ஜனவரி-28 – கணினி முறையிலான வாகன பரிசோதனை மையமான PUSPAKOM-மிலிருந்து வெளியேறியக் கையோடு, லாரிகளையும் பேருந்துகளையும் நிறுத்தி தனியொரு பரிசோதனையை நடத்துகிறது சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை.
வாகனங்களின் பிரேக், டயர், விளக்குகள் போன்றவை அதில் பரிசோதிக்கப்படுகின்றன.
குறிப்பாக டயர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது; டயர்கள் மோசமான நிலையிலிருந்தால் லாரியோ பேருந்தோ செயல்படுவதிலிருந்து உடனடியாகத் தடைச் செய்யப்படும்.
கடந்தாண்டு தாங்கள் தொடங்கிய இந்த Ops Puspakom சோதனையில், இதுவரை 10 கனரக வாகனங்கள் தோல்விக் கண்டிருப்பதாக, அத்துறையின் இயக்குநர் Azrin Borhan கூறினார்.
சோதனையில் தோல்வி காணும் வாகனங்கள், PUSPAKOM-மில் மற்றொரு பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவிடப்படும் என்றார் அவர்.
ஷா ஆலாமில் நேற்று நடைபெற்ற Ops Bus Terminal சோதனை நடவடிக்கையின் போது Azrin செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில் 1,701 பேருந்துகள் சோதனையிடப்பட்டதில், 34 வகையான குற்றங்களுக்காக 25 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.
தொடர்ந்து வலப்புற பாதையிலே செல்வது,
தேய்ந்து போன டயர்கள், விரிசலடைந்த கண்ணாடிகள், இரண்டாவது ஓட்டுநர் இல்லாதது ஆகியவை அக்குற்றங்களில் அடங்கும்.