
கோலாலம்பூர், ஜனவரி-2 – ஊழியர் சேமநிதி வாரியமான EPF கணக்கில் 1 மில்லியன் சேமிப்பு வைத்திருப்பது, இனி கூடுதல் பணத்தை எடுக்க அனுமதி அளிக்காது.
ஜனவரி 1 முதல் இப்புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
RIA எனப்படும் போதுமான ஓய்வூதிய வருமான கட்டமைப்பின் கீழ், ஓய்வூதிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், EPF 3 நிலை சேமிப்பு அளவுகோலை அறிமுகப்படுத்தியுள்ளது:
அதாவது, RM390,000 அடிப்படை சேமிப்பு, RM650,000 போதுமான சேமிப்பு, RM1.3 மில்லியன் மேம்படுத்தப்பட்ட சேமிப்பு ஆகும்.
அவ்வகையில், 55 வயதுக்குக் குறைவான உறுப்பினர்களுக்கு, கூடுதல் பணம் எடுக்கும் வரம்பு இவ்வாண்டு RM1.1 மில்லியனாகவும், 2027-ல் RM1.2 மில்லியனாகவும் 2028-ல் RM1.3 மில்லியனாகவும் உயர்த்தப்படும்.
இந்த நடவடிக்கை 2026 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இது gig தொழிலாளர்கள் மற்றும் இல்லத்தரசிகள் போன்றோருக்கு விரிவான பாதுகாப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.



