Latestமலேசியா

RM1.5 மில்லியன் மதிப்புள்ள ஷாபு கடத்தல் முயற்சி முறியடிப்பு: இருவர் கைது

RM1.5 மில்லியன் மதிப்புள்ள ஷாபு கடத்தல் முயற்சி முறியடிப்பு: இருவர் கைது

சிரம்பான், பிப்ரவரி 19 –

பெரொடுவா பெஸ்ஸா காரை பயன்படுத்தி 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருளைக் கடத்திச் சென்ற இரண்டு ஆடவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சுமார் 30 வயதுடைய சந்தேகநபர்கள் பிப்ரவரி 12 ஆம் தேதியன்று பெடாஸ், ரெம்பாவ் (Pedas, Rembau) அருகேயிருக்கும், வடக்கு–தெற்கு (PLUS) நெடுஞ்சாலையின் 236.9 வது கிலோ மீட்டரில் கைது செய்யப்பட்டனர். நெகிரி செம்பிலான் போதைப்பொருள் குற்றப்பிரிவு மற்றும் புக்கிட் அமான் (Bukit Aman) போக்குவரத்து அமலாக்கப் பிரிவு இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

வாகனத்தின் பின்புற பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 பொதிகளில் சுமார் 1.56 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான, 30.6 கிலோ கிராம் எடையுள்ள ஷாபு வகை போதைப்பருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அளவு போதைப்பொருட்கள் சுமார் 30,000 பயனாளர்களை பாதிக்கக்கூடியது என போலீசார் தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருள் சிலாங்கூர் பூச்சோங்கிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், தெற்கு மாநிலங்களில் விநியோகிக்க திட்டமிடப்பட்டதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இக்கும்பல் 2025 முதல் இந்த செயலில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சிறுநீர் பரிசோதனையில் அவ்விருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதைத் போலீசார் அவ்விருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!