கோலாலம்பூர், நவம்பர் 27 – இந்திய சிறு வணிகர்களின் மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது 6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஐ-பேப் திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் இன்று 20 இந்திய சிறு வணிகர்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டதாக தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
எஞ்சிய பணமும் 50க்கு மேற்பட்ட சிறு வணிகர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று இன்று நடைபெற்ற ஐ-பேப் திட்டத்தின் காசோலை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
அமைச்சின் கீழ் இயங்கும் எஸ்.எம்.இ. கோர்ப் வாயிலாக ஒதுக்கப்பட்ட இந்த மானியம் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள பெரு உதவியாக அமைந்துள்ளதாக அம்மானியத்தின் காசோலை பெற்றவர்கள் இவ்வாறு வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தனர்.
தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சின் இந்திய தொழில்முனைவருக்கான 136 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி, நிதியில் 100 மில்லியன் ரிங்கிட் மக்களிடம் சேர்க்கப்பட்டதாக டத்தோ ஸ்ரீ ரமணன் இன்று தெரிவித்தார்.