
ரந்தாவ் பந்தாய் , ஜன 16 – சுமார் 10,000 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு பழங்களை கடத்தியது தொடர்பில் தாய்லாந்து பெண் ஒருவரை பொது நடவடிக்கை படையின் அதிகாரிகள் கைது செய்தனர். காரில் வந்த அந்த 43 வயதுடைய அந்த பெண் Kampung Gual Periokகில் மாலை மணி 5.30 அளவில் கைது செய்யப்பட்டதாக பொது நடவடிக்கை படையின் தென்கிழக்கு பட்டாளத்தின் கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அஸ்ஹான் (Nik Ros Azhan Nik Abdul Hamid ) தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக அந்த பெண் ரந்தாவ் பஞ்சாங்கிலுள்ள படகுத்துறையில் அப்பழங்களை வாங்கி வந்ததாக நம்பப்படுகிறது. உள்நாட்டு வியாபாரிகளிடம் அப்பழங்களை வினியோகிக்கும் வழியில் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே செவ்வாய்க்கிழமை இரவு கோத்தா பாருவில் Yaba மாத்திரைகளை வைத்திருந்தது தொடர்பில் உள்நாட்டு ஆடவரும் தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டதாகவும் நிக் ரோஸ் கூறினார். அவர்கள் இருவரும் மேல் நடவடிக்கைக்காக மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.