Latestமலேசியா

RM13 பில்லியன் SARA ரொக்க உதவித் தொகை நாளை முதல் விநியோகிக்கப்படும்

கோலாலம்பூர், ஜன 14 – Sumbangan Asas Rahmah எனப்படும் Sara உதவித் தொகை நாளை புதன்கிழமைமுதல் விநியோகிக்கப்படும். 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 10 பில்லியன் ரிங்கிட்டைவிட இவ்வாண்டுக்கான இந்த உதவித் தொகை 13 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. Sara மற்றும் Sumbangan Tunai Rahmah ( STR ) உதவித் தொகைக்காக 20225 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலான உதவித் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. e-Kasih முறையின் கீழ் பதிவான ஏழை மற்றும் மோசமான வறுமை நிலையிலுள்ள குடும்பத்தினருக்கு 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 1200 ரிங்கிட் உதவித் தொகை இந்த ஆண்டு 2,100 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதம்வரை MyKad மூலம் மாதந்தோறும்
100 ரிங்கிட் உதவி தொகையை தகுதி பெற்றவர்கள் பெறுவார்கள். 2025 ஏப்ரல் தொடங்கி இந்த உதவித் தொகை மாதத்திற்கு 200 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கூடுதலாக 5.4 மில்லியன் பேர் Sumbangan Tunai Rahmah STR ரொக்க உதவித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கூடுடுதல் Sara உதவித் தொகையை பெறுவார்கள். தற்போது Sara உதவியைப் பெறும் 700,000 பேர் மற்றும் STR உதவியைப் பெறும் 4.7 மில்லியன் பேர் e-Kasih தரவு பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குடும்பத்திற்கான கூடுதல் சாரா உதவித் தொகை ஒரு மாதத்திற்கு 100 ரிங்கிட்டாக இருக்கும். அதே வேளையில் தனியாக இருக்கும் மூத்த குடிமக்கள் ஒரு மாதத்திற்கு Sara கூடுதல் உதவித் தொகையாக 50 ரிங்கிட் பெறுவார்கள் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!