பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்-4 – சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் தான் வாங்கிய நாசி லெமாக்களுக்கு 26 ரிங்கிட் 60 சென் செலுத்த வேண்டிய வாடிக்கையாளர், தவறுலாக 2,660 ரிங்கிட்டைச் செலுத்தியிருக்கிறார்.
QR குறியீட்டு வழியாக பணத்தைச் செலுத்தியவர், சரியாக கவனிக்காமல் 100 மடங்கு அதிகமாக பணத்தைச் செலுத்தியுள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நாசி லெமாக் அங்காடி கடை உரிமையாளர், சமூக ஊடகத்தில் அது குறித்து பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.
CCTV கேமராவின் screenshot-டை பகிர்ந்து, “இது நீங்களா? RM26.60 ரசீதுக்கு RM2,660 பணத்தைக் கட்டிச் சென்றுள்ளீர்கள்!” என அந்த ‘தாராள’ மனம் படைத்த வாடிக்கையாளரைத் தேடிக் கண்டுபிடிக்க உதவி கேட்டுள்ளது.
மலேசிய நெட்டிசன்கள் வழக்கம் போலவே தங்களின் நகைச்சுவைக் கருத்துகளால் அப்பதிவை மேலும் வைரலாக்கியுள்ளனர்.
ஆளாளுக்கு, ‘அது நான் தான்’ ‘இதோ என் வங்கிக் கணக்கு எண்கள்’ ‘இன்றே விருந்து வைப்போமா’ என கருத்துகளைப் பதிவிட்டது சிரிப்பை வரவழைத்தது.
சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் பணத்தைத் திரும்பப் பெற்று விட்டாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை.