ஷா ஆலம், செப்டம்பர் 6 – தனது கடையில் வாங்கிய நாசி லெமாக்களுக்கு 26 ரிங்கிட் 60 சென்னுக்குப் பதிலாக 2,660 ரிங்கிட்டை செலுத்திய வாடிக்கையாளரின் மீதி பணத்தை திருப்பித் தந்த விற்பனையாளருக்குப் பாராட்டு பெருகி வருகிறது.
சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள நாசி லெமாக் கடையில் பெண் ஒருவர் 26 ரிங்கிட் 60 சென்னுக்கு நாசி லெமாக் சாப்பிட்டுள்ளார்.
ஆனால், QR குறியீட்டு வழியாகச் செலுத்திய பணமோ 100 மடங்குஆகும்.
எனவே, சம்பந்தப்பட்ட விற்பனையாளர் அந்த வாடிக்கையாளரிடம் மீதி பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து, இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவு செய்தார்.
CCTV படக்கருவியின் screenshot-டையும் பகிர்ந்து, அந்த வாடிக்கையாளரைத் தேடிக் கண்டுபிடிக்க உதவி கேட்ட நிலையில், அவர் அடையாளம் காணப்பட்டார்.
சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் அந்த உணவக விற்பனையாளர் மீதி பணத்தை வழங்கியதையும், சமூக ஊடகத்தின் வாயிலாக உறுதிப்படுத்தினார்.