Latestமலேசியா

RM5 மில்லியன் லஞ்சம், லம்போர்கினி பரிசு; முன்னாள் அமைச்சரிடம் விசாரணை

கோலாலம்பூர், டிச 29 – கோலாலம்பூரில் நில பரிமாற்றம் மற்றும் விளம்பரப் பலகை விளம்பரத் திட்டம் தொடர்பாக சுமார் 5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் மற்றும் ஒரு Lamborghiniயைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC ஒரு முன்னாள் அமைச்சரை விசாரணைக்கு அழைத்துள்ளது.

5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் ஒரு சொத்து மேம்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டதாக MACC க்கு அணுக்கமான தகவல்கள் கூறின.

அதே நேரத்தில் சொகுசு கார் ஒரு விளம்பரப் பலகை நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்கு வந்ததாகவும் , சொகுசு காருக்கான பணப் பரிமாற்றத்திற்கான மூலத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நில வழக்கைப் பொறுத்தவரை, சூராவ் கட்டுவதற்காக முன்னர் அரசாங்க பதிவேட்டில் வெளியிடப்பட்ட நிலங்கள் ஒரு பினாமி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட 16 சாட்சிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக MACC தலைவர் Azam Baki உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!