
கோலாலம்பூர், டிசம்பர் 19 – பிலிப்பைன்ஸ் நாட்டின் Mindanao பகுதியில் இன்று 5.0 அளவிலான மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு துறையான MetMalaysia தெரிவித்துள்ளது.
இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நகரத்திற்கு கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததுடன், 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த நிலநடுக்கம் மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றும் MetMalaysia தெரிவித்துள்ளது.
கடந்த சில காலங்களாக பிலிப்பைன்ஸின் பல பகுதிகளில், தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் பதிவாகி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



