
குவாந்தான், செப்டம்பர் 18 – கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று அன்று குவாந்தானில் மலேசிய அரச விமானப்படையின் (RMAF) போர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவ்விமானம் பறவையுடன் மோதியதனால்தான் இவ்விபத்து ஏற்பட்டதென்று ஆரம்ப விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
விமானம் புறப்படும் தருணத்தில் பெரிய பறவை ஒன்று இடது இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டதால், அது செயலிழந்தது எனவும் இதுவே விபத்துக்கான முக்கிய காரணம் எனவும் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.
‘பர்பிள் ஹெரான்’ எனப்படும் வகையைச் சார்ந்த அப்பறவை 1.5 கிலோ கிராம் எடை கொண்டதெனவும் இந்த தாக்குதலால் இன்ஜின் பிளேட்கள் கடுமையாக சேதமடைந்ததோடு விமானம் அதன் தள்ளும் வல்லமையை முற்றிலும் இழந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று சுமார் 30 அடி உயரத்தில் இன்ஜின் செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.