Latestமலேசியா

RMK10 & RMK11 சுகாதாரத் திட்டங்களில் தாமதம்; கடுமையான கண்காணிப்பு அவசியம் என செனட்டர் லிங்கேஷ்வரன் வலியுறுத்து

கோலாலம்பூர், டிசம்பர் 31 –  சுகாதார வசதிக் கட்டமைப்புத் திட்டங்களில் ஏற்பட்ட தாமதம் குறித்து செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கடும் கவலைத் தெரிவித்துள்ளார்.

RMK10 எனப்படும் 10-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் 28 திட்டங்களில் 4 முடிக்கப்பட்டுள்ளன, மேலும் நான்கு திட்டங்கள் 95% நிறைவு பெற்றுள்ளன.

ஆனால் 8 திட்டங்கள் குத்தகையாளர் பிரச்னை காரணமாக பெரும் தாமதத்தை சந்தித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

இவ்வேளையில், பதினோறாவது மலேசியத் திட்டத்தின் கீழ் உள்ள 51 திட்டங்களில் 7 முடிக்கப்பட்டுள்ளன, 39 திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன, 5 திட்டங்கள் கட்டுமானத்திற்கு முந்தைய நிலையில் உள்ளன.

மேலவையில் தான் கேட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சான KKM வழங்கிய தரவுகள் அடிப்படையில் லிங்கேஷ்வரன் அந்தக் கவலையை வெளிப்படுத்தினார்.

COVID-19 தொற்றுநோய், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பொருட்கள் விநியோக சிக்கலை, தாமதத்திற்கான காரணமாக KKM கூறியுள்ளது.

எனவே, கடுமையான கண்காணிப்பு மற்றும் விரைவான நடவடிக்கை அவசியம் என வலியுறுத்திய லிங்கேஷ்வரன், எக்காரணம் கொண்டும் மக்களின் சுகாதார சேவைகள் பாதிக்கப்படக்கூடாது என தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!