Latest

Rokomany தாயின் ஃபிஸ்துலா தளம் சிகிச்சைக்கு ஒன்றிணைந்து உதவிக் கரம் நீட்டுவோம்!

ஜோகூரைச் சேர்ந்த 65 வயதான Rokomany எனும் மாது ஒருவர், 10 வருடங்களாகச் சிறுநீரக செயலிழப்பால், தாமான் ஜோகூர் ஜெயாவிலுள்ள dialysis மையத்தில் இரத்தக் சுத்திகரிப்பு சிகிச்சையைப் பெற்று வருகிறார்.

வாரத்தில் மூன்று முறை சிகிச்சையை மேற்கொண்டு வரும் இவருக்கு, தற்போது இடது கையிலுள்ள ஃபிஸ்துலா (fistula) தளம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபிஸ்துலா தளம் சேதமடைய, இவருக்குக் கடந்த ஒரு மாதமாகக் கழுத்தில் குழாய் பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கழுத்தில் குழாய் பொருத்தப்பட்டிருப்பதால், Rokomany பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதாகவும், பாக்டீரியா தொற்று அபாயத்தையும் எதிர்நோக்குவதாக இவரின் 41 வயது மகள் Tekineswari வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
Interview

தனித்து வாழும் Rokomany-க்கு துணை நிற்பதே இவரின் 41 வயது மகளும், 33 வயது மகனுமே.

மகனின் 1,500 ரிங்கிட் குடும்ப வருமானத்தில், சமூக நலத்துறையின் 300 ரிங்கிட் உதவித் தொகையுடன் வீட்டு வாடகை, சமையல் பொருட்கள், சிகிச்சைக்காகப் பயணம் செய்து வருவதே சவால்தான்.

இந்நிலையில், மருத்துவர் விரைவில் இடது கையிலுள்ள ஃபிஸ்துலா (fistula) தளத்தை அறுவை சிகிச்சை செய்வது அவசியம் எனத் தெரிவிக்க, தற்போது சிகிச்சைக்காக 7,500 ரிங்கிட்டிற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Yayasan Sultanah Rogayah உட்பட பொதுமக்களின் சிலரின் உதவி கிடைத்திருப்பினும், போதவில்லை என்ற நிலையில் இப்போது பொதுமக்களின் உதவியை Tekineswari நாடியிருக்கிறார்.

5 குழந்தைகளுக்குத் தாயான இவர், விரைவில் நலம் பெற, திரையில் காணும் எண்ணில் பொதுமக்கள் உதவிக் கரம் நீட்டலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!