
BUDI MADANI RON95 அல்லது BUDI95 திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோல் வாங்குவதை ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டுமே எனக் கட்டுப்படுத்தும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திற்கு இல்லை.
ஊடகங்களில் முன்னதாக குழப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து நிதியமைச்சு அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளது.
இதுபோன்ற கட்டுப்பாடு மக்கள் தங்களின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துக்கு எதிரானது என அது கூறியது.
அரசாங்கம் தற்போது கசிவுகளைத் தடுக்கும் நடைமுறைகளை ஆராய்ந்து வருகிறது; ஆனால் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் மக்களுக்கு சிரமம் தரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
உதாரணமாக, குறுகிய நேர இடைவெளியில் அடிக்கடி பெட்ரோல் நிரப்புவதைத் தடுக்கலாம் என்பதும் பரிசீலனையில் உள்ளதாக, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் முன்னதாகக் கூறியிருந்தார்.
தற்போதைக்கு கடுமையான நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படாது… எனினும் நடைமுறைகள் நியாயமானதும் செயல்படுத்த எளிதானதுமாக இருக்கும் வகையில் அரசாங்கம் அதை விரைவில் முடிவுச் செய்யும் என்றார் அவர்.