
புத்ராஜெயா, டிசம்பர்-8 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், Sahabat Penggerak MADANI மற்றும் SIKR 3.0 எனும் மக்கள் நலக் காப்பீட்டு திட்டம் ஆகிய 2 புதிய முயற்சிகளை தொடக்கி வைத்துள்ளார்.
SIKR 3.0 திட்டம் eKasih தரவுத்தளத்தில் பதிவுச் செய்யப்பட்ட ஏழை மற்றும் பரம ஏழை குடும்பங்களுக்கு இலவசக் காப்பீட்டு பாதுகாப்பு வழங்குகிறது.
குடும்பங்கள் விபத்து, நோய், அல்லது வருமான இழப்பைச் சந்திக்கும் நேரங்களில் இத்திட்டம் உதவியாக இருக்கும்.
அதே சமயம், Sahabat Penggerak MADANI திட்டமானது அரசாங்கக் கொள்கைகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டுசேர்க்க பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்கள் கட்டமைப்பை உருவாக்குகிறது.
அதோடு ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், தரமான தகவல்களை அடிதட்டு மக்களுக்கு கொண்டுசேர்க்கவும் இது உதவும்.
இவ்விரண்டு முயற்சிகளும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகும் என டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
புத்ராஜெயாவில் வெள்ளிக்கிழமைத் தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெற்ற Program Rancakkan Madani Bersama Malaysiaku மற்றும் பொதுச் சேவை சீர்திருத்தம் மீதான 2025 தேசிய மாநாடு ஆகிய நிகழ்வுகளை ஒட்டி இவ்விரு முன்னெடுப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
துணைப் பிரதமர்கள் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.



