
கோலாலம்பூர், பிப்ரவரி-5-Sumbangan Asas Rahmah அல்லது SARA உதவித் திட்டத்தின் கீழ், வருங்காலத்தில் உறைந்த உணவுப் பொருட்களை (Frozen Food) வாங்கவும் மக்கள் அனுமதிக்கப்படலாம்.
அதற்கான சாத்தியங்கள் ஆராயப்படுவதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
SARA செயல் திட்டக் குழுவுடன் இது குறித்து கலந்துரையாடப்பட்டு, முழுமையான ஆய்வுக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என, மக்களவையில் அவர் கூறினார்.
தற்போது SARA திட்டத்தின் கீழ் அரிசி, ரொட்டி, முட்டை, சமையல் எண்ணெய், பிஸ்கட் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்கள் MyKad மூலம் வாங்க முடிகிறது.
உறைந்த உணவுப் பொருட்களையும் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகமான தேர்வுகள் கிடைக்கும் என்றும், அவர்களின் உணவு தேவைகள் மேலும் சிறப்பாக பூர்த்திச் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



