Latestமலேசியா

Score Marathon 2025 நீண்டதூர ஓட்டத்தில் சிவனேஸ்வரன் வெற்றிவாகை சூடினார்

கோலாலம்பூர், ஜூலை 14 – புத்ரா ஜெயாவில் நடைபெற்ற 42 கிலோமீட்டர் Score Marathon 2025 நெடுஞ்தூர ஓட்டப் போட்டியில் தேசிய ஓட்டப்பந்தய வீரரான G. சிவனேஸ்வரன் ( Sivaneshwaran ) வெற்றி வாகை சூடினார்.

முதல் முறையாக இப்போட்டியில் கலந்துகொண்ட அவர் தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி 2 மணி 48 நிமிடம் , 8 வினாடியில் ஒடி முடித்து வெற்றி பெற்றார். இப்போட்டியில் தனக்கு கடும் மிரட்டலாக விளங்கிய இரண்டாவது இடத்தைப் பெற்ற லிம் கோக் லியோங் மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்ற முகமட் நகிப் ஹைக்கால் அப்துல் ரஹ்மான் ஆகியோரை முறியடித்து சிவனேஸ்வரன் முதல் இடத்தைப் பெற்றார்.

கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட கடுமையான பயிற்சியே தனது இந்த வெற்றிக்கு காரணம் என 2018 ஆம் ஆண்டு ஆசியான் பல்கலைக்கழக ஓட்டப்பந்தய போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றவருமான சிவனேஸ்வரன் தெரிவித்தார். இதனிடையே மகளிர் பிரிவில் Score Marathon போட்டியில் உள்நாட்டு ஓட்டப்பந்த வீராங்கனையான Lee siok Chin முதல் இடத்தைப் பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!