Latestமலேசியா

‘Selamat Datang Modiji’ – ‘அதிகபட்ச பாரம்பரிய இந்திய நடன கலைஞர்கள்’என மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு

கோலாலாம்பூர், பிப்ரவரி-28-பிப்ரவரி 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட மலேசிய வருகையின் போது, “Selamat Datang Modiji” என்ற சிறப்பு இந்திய சமூக நிகழ்ச்சி ஸ்ரீ கெம்பாங்கான் MINES அனைத்துலகக் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் மோடியுடன், நமது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக “Swagatham” நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையம் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில், மலேசியாவின் 46 நடன நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த 800 கலைஞர்கள் பங்கேற்றனர்.

இது ‘அதிகபட்ச பாரம்பரிய இந்திய நடன கலைஞர்கள்’ என்ற சாதனையாக மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவுச் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற அங்கீகார விழாவில், இந்திய உயர் ஆணையர் பி.என். ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, Swagatham நடனத்தில் பங்கேற்ற கலாச்சார நிறுவனங்கள், கலை அகாடமிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களை பாராட்டினார்.

இந்த விழாவில் Temple of Fine Arts-சின் தில்லை ராஜ், Sutra Foundation நிறுவனர் பத்ம ஸ்ரீ டத்தோ ரம்லி இப்ராஹிம், MI Cultural Events-சின் டத்தோ நபேஷ் கண்ணா, கண்பார்வை அற்றோருக்கான மலேசியச் சங்கத்தின் டத்தோ ஜோர்ஜ் தோமஸ், GISS சார்பில் மனோஜ் நாயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த Selamat Datang Modiji நடன நிகழ்வு குறித்தும், அதற்கான தயார் நிலை குறித்தும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தின் ஆலோசகரும் இயக்குநருமான விஜயலக்‌ஷ்மி சுந்தராஜன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

கடல் கடந்து வந்த மோடியை, இந்தியக் கலாச்சார வேர் மாறாமல் பண்பாட்டு நடனங்களுடன் வரவேற்றது, அவரையே மலைக்கச் செய்ததோடு, இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய உறவுக்கும் சான்றாக அமைந்ததாக, மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் பி.என்.ரெட்டி வருணித்தார்.

இந்த அங்கீகார விழா, மலேசிய சாதனையை மட்டுமல்லாமல், மலேசிய இந்தியக் கலைஞர்களின் ஒற்றுமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் கொண்டாடியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!