கோலாலம்பூர், அக்டோபர்-29, நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் Shine Muscat வகைத் திராட்சைப் பழங்களில் ஆபத்தான இரசாயனம் எதுவுமில்லை என சுகாதார அமைச்சு KKM உறுதிபடுத்தியுள்ளது.
இவ்வாண்டு செப்டம்பர் வரையிலான பரிசோதனையில் அது கண்டறியப்பட்டது.
234 திராட்சை மாதிரிகளில் 4 மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட தர கட்டுப்பாட்டைப் பூர்த்திச் செய்யவில்லை.
ஆனால் அவை கூட Shine Muscat வகை திராட்சைகள் அல்ல என KKM தெளிவுப்படுத்தியது.
தாய்லாந்தில், தாங்கள் பரிசோதனை செய்த Shine Muscat திராட்சை மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாக, அந்நாட்டு பூச்சிக்கொல்லி எச்சரிக்கைக் கட்டமைப்பு முன்னதாக அறிவித்திருந்தது.
இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தாய்லாந்து பயனீட்டாளர் சங்கமும் அந்நாட்டரசை வலியுறுத்தியது.
இந்நிலையில் மலேசியா இறக்குமதி செய்யும் Shine Muscat திராட்சைகள் உண்பதற்கு பாதுகாப்பானதே என KKM உறுதிப்படுத்தியது.