Latestமலேசியா

Silent call மோசடி: AI மூலம் குரல் நகலெடுக்கப்படும் புதிய அபாயம் குறித்து போலீஸார் எச்சரிக்கை

கோலாலம்பூர், டிசம்பர்-12 – நாட்டில் அதிகரித்து வரும் புதிய வகை தொலைபேசி மோசடியை பற்றி போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இது “silent call – AI குரல் நகல் மோசடி” என்று அழைக்கப்படுகிறது.

 

முன்பின் தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்பில் யாரும் பேசாமல் இருப்பார்கள்.

 

நீங்கள் “ஹலோ” என ஒரு வார்த்தை சொன்னாலே, உங்கள் குரல் AI மூலம் பதிவுச் செய்யப்பட்டு நகலாக உருவாக்கப்படுகிறது.

 

பின்னர் அந்த குரலை பயன்படுத்தி குடும்பத்தினரிடம் பணம் கேட்க, வங்கிகளை ஏமாற்ற, குரல் சரிபார்ப்பு முறைகளை (voice verification) உடைக்க, இந்த மோசடி கும்பல்கள் முயல்வதாக போலீஸ் அம்பலப்படுத்தியது.

 

எனவே, முன்பின் தெரியாத எண்களிலிருந்து வரும் silent call அழைப்புகளை உடனே துண்டிக்கவும்…

 

“ஹலோ” கூட சொல்ல வேண்டாம்…

 

சந்தேகத்திற்கிடமான எண்களையும் உடனே block செய்து விடுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

இந்த மோசடி AI voice cloning தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் மிகவும் ஆபத்தான புதிய முறை என்று போலீஸ் எச்சரித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!