
கோலாலம்பூர், அக்டோபர் 7 –
Sistem Lingkaran Lebuhraya Kajang எனப்படும் சில்க் நெடுஞ்சாலையின் 25.7 கிலோமீட்டர் பகுதியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த பல்வாகன விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் மொத்தம் ஐந்து கார்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர்களில் ஒருவர் ஒரு காருக்கும் மற்றொரு காருக்கும் போதுமான இடைவெளியைப் பேணாததால், திடீர் பிரேக் அடிக்கும் சூழ்நிலையில், வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் போனது.
இதனால் பின்புற வாகனங்கள் ஒன்றை ஒன்று தவிர்க்க முயன்றபோது பல்வகை திசைகளில் மோதல் ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கையெலும்பு முறிவு, முகம் மற்றும் உடலின் பல இடங்களில் காயம் அடைந்த மூன்று மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 5,000 முதல் அதிகபட்சம் 10,000 ரிங்கிட் வரை அபராதமும் 12 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கிப்படுகின்றது.
மேலும் பொதுமக்கள் சாலையில் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்