
செப்பாங், ஜனவரி-12-செப்பாங் அருகே SKVE நெடுஞ்சாலையில் ஒரு லாரியின் டயர் கழன்றி உருண்டோடி ஒரு காரின் மீது விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவத்தின் போது காஜாங்கில் இருந்து பூச்சோங் சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்புற இடது டயர் வெடித்து அது தூக்கி எறியப்பட்டது.
டயர் ‘பறந்து’ போய், மேம்பாலத்தின் கீழே சென்ற ஒரு கார் மீது நேராக விழுந்தது.
இந்த காட்சி, மற்ற வாகனமோட்டிகளையும் அதிர்ச்சியடையச் செய்தது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் dashcam வீடியோக்களில், அந்த டயர் காரின் கூரையில் பலத்த தாக்கத்துடன் விழுவது தெளிவாகத் தெரிகிறது.
நல்ல வேளையாக 20 வயது கார் ஓட்டுநர் உயிர் தப்பினார்; ஆனால் வாகனம் கடுமையாக சேதமடைந்தது.
லாரி ஓட்டுநருக்கும் காயமேதும் இல்லை.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் லாரி சரியான பராமரிப்பில் இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைரலான வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், கவலை வெளியிட்டு, கனரக வாகனங்களுக்கு கடுமையான பரிசோதனைகள் அவசியம் எனக் கோரியுள்ளனர்.



