Latestமலேசியா

SMRT Technologiesக்கு தொழில்நுட்ப துறையில் ‘பங்குதாரர்களுக்கான மிக உயர்ந்த வருமானம்’ ஈட்டும் நிறுவனம் எனும் விருது

கோலாலம்பூர்,ஆகஸ்ட்-6 – Edge Centurion Club Awards 2025ன் விருதளிப்பு விழாவில் தொழில்நுட்ப துறையில் பங்குதாரர்களுக்கான மிக உயர்ந்த வருமானம் ஈட்டும் நிறுவனமாக SMRT Technologies Berhad நிறுவனத்திற்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இது அந்த நிறுவனத்தின் நிதித்திறன், பங்குதாரர்களுக்கான மதிப்பு உயர்வு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு காட்டிய அர்ப்பணிப்புக்காக வழங்கப்பட்ட அங்கீகாரமாகும். இந்த விருதை SMRT Technologies Berhad நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மஹா பாலன் மற்றும் அதன் தலைமை செயலதிகாரி Kit Au பெற்றுக் கொண்டனர்.

இந்த விருதினை மலேசிய முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு சப்ருல் அசீஸ் எடுத்து வழங்கினார்.சந்தை மூலதனத்தின் அடிப்படையில் ஒரு பில்லியனுக்கும் கீழுள்ள மலேசியாவின் சிறந்த நிறுவனங்களை கொண்டாடும் நிகழ்ச்சியாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!