
கோலாலம்பூர், ஜனவரி-28-சர்ச்சைக்குரிய SOSMA சட்டம் மீதான உத்தேச திருத்தங்கள் அடுத்த மக்களவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் அதனை உறுதிப்படுத்தினார்.
SOSMA சீர்திருத்தங்கள் எப்போது நடைமுறைக்கு வரும், அதற்கான காலவரையறை என்ன என, மக்களவையில் ஜெலுத்தோங் உறுப்பினர் RSN ராயர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், சைஃபுடின் அவ்வாறு சொன்னார்.
SOSMA மறுஆய்வு தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.
உள்துறை அமைச்சு, தேசிய சட்டத்துறை அலுவலகம் மற்றும் போலீஸுடன் ஆலோசனை முடிந்த பின், திருத்தங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும்.
பிறகு மக்களவையில் அது தாக்கலாகும் என சைஃபுடின் தெரிவித்தார்.
எது எப்படி இருந்தாலும், சட்டத் திருத்தத்தில் தேசிய பாதுகாப்புக்கும் மனித உரிமைக்கும் சமச்சீரான முக்கியத்துவம் வழங்கப்படும் என அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.
SOSMA-வின் முக்கிய திருத்தங்கள், விசாரணையின்றி 28 நாட்கள் தடுத்து வைக்கப்படுவது உள்ளிட்ட விதிகளை உட்படுத்தியுள்ளன.



