
டெக்சாஸ், ஜன 17 – விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு கொண்டுச் செல்வதற்காக Space X நிறுவனத்தின் சோதனை முயற்சியில் starship வெடித்து சிதறியதில் அதன் இரண்டாவது முயற்சியும் தோல்வியில் முடிந்தது. உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஸ்ஸிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ்ஸில் Boca Chica வுக்கு அருகே எலன் மாஸ்ஸ்கிற்கு சொந்தமான நிறுவனத்தில் starbase ராக்கேட் விண்ணில் செலுத்தப்பட்டது.
சற்று நேரத்திற்குப் பிறகு ராக்கெட் இரண்டாக பிரிந்து பூஸ்டர் பகுதி பூமியை நோக்கி இறங்கத் தொடங்கியது. அதன்பின் சில நிமிடங்களில் ஸ்டார்ஷிப்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது கடலில் வெடித்து சிதறி விழுந்தது. இரண்டாவது முயற்சியிலும் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம் என Space X ராக்கெட் ஏவும் மையத்தில் நேரடி நிலவரத்தில் ஈடுபட்டிருந்த John insprucker தெரிவித்தார். அந்த ராக்கெட் ஏவப்பட்டு 148 கிலோமீட்டர் உயரத்திற்கு சென்றபின் வெடித்தது.