புத்ராஜெயா, ஜனவரி-9, தற்போது நடைபெற்று வரும் 2024 SPM தேர்வின் வரலாறு பாடத்திற்கான கேள்வித் தாட்கள் கசிந்ததாகக் கூறப்படுவதை, கல்வி அமைச்சு மறுத்துள்ளது.
அதுவோர் அடிப்படையற்ற குற்றச்சாட்டு என இன்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு தெளிவுப்படுத்தியது.
வைரலாகியுள்ள scrinshot படங்களில் ஒன்றில் கூட, SPM வரலாறு தாள் 1, தாள் 2-டின் கேள்விகள் இல்லை.
அதிலிருப்பதெல்லாம், வரலாறு பாடநூலிலிருந்து என்னென்ன தலைப்புகளில் கேள்விகள் வரலாமென்ற ஓர் அனுமானப் பட்டியலே.
இதுபோன்ற அனுமானங்கள் வெளியிடப்படுவது காலங்காலமாக நடக்கும் ஒன்று தான்.
அதை வைத்து, SPM கேள்வித் தாட்களே கசிந்து விட்டதாகக் கூறுவது தவறாகுமென அமைச்சு சுட்டிக் காட்டியது.
எனவே, மாணவர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பி கவனத்தைச் சிதற விடாமல், தேர்வுகளுக்குத் தங்களை மோழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சு அறிவுறுத்தியது.