Latestமலேசியா

SPM சான்றிழ் இல்லாத ஒப்பந்த கால அதிகாரிகளை நிறுத்தும் உத்தரவா ? JPA மறுப்பு

கோலாலம்பூர், பிப் 18 – எஸ்.பி.எம் (SPM) சான்றிதழ் இல்லாத ஒப்பந்த கால அதிகாரிகளின் சேவையை நிறுத்தும் உத்தரவை தங்களது தரப்பு பிறப்பிக்கவில்லையென பொதுச் சேவைத்துறை வலியுறுத்தியது.

ஒப்பந்த அடிப்படையிலான அதிகாரிகள் நியமனம் , நிர்வாகம் சேவைக்கான நடப்பு தேவையின் அடிப்படையில் இருப்பதோடு இரு தரப்புக்களிடையே காணப்பட்ட இணக்கத்திற்கு ஏற்ப இது இருப்பதாக பொதுச் சேவைத்துறை தெரிவித்தது.

2024ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தகால அதிகாரிகளில் 2,037 பேர் மட்டுமே SPM சான்றிதழ் இல்லாதவர்களாவர்.

கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி வரை, பொது சேவை ஊதிய முறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து SPM சான்றிதழ் இல்லாத ஒப்பந்த அதிகாரிகளை மீண்டும் நியமிக்க, சேவைத் திட்ட நிபந்தனைகளைத் தளர்த்துவதற்காக பல்வேறு ஏஜென்சிகளிடமிருந்து (agensi) 108 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அந்த எண்ணிக்கையில், 83 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன, 25 அதிகாரிகள் ஒப்பந்தத்தின் கீழ் இருப்பதால் அல்லது இதற்கு முன் நியமிக்கப்பட்டவர்கள் முறையற்றதாக இல்லை எனக் கண்டறியப்பட்டதால், பரிசீலிக்க முடியவில்லை என பொதுச் சேவைத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!