Latestமலேசியா

SPRINT நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் காரிலிருந்து குதித்த பெண்; வைரலாகும் வீடியோ

கோலாலம்பூர், ஆகஸ்ட்-19 – SPRINT நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருந்த வாகனத்திலிருந்து பெண்ணொருவர் குதித்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், அது குறித்து புகார் செய்யுமாறு போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

வீடியோ வைரலான அச்சம்பவம் தொடர்பில் இதுவரை தமது தரப்பு புகார் எதனையும் பெறவில்லை என பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைவர் Ku Mashariman Ku Mahmood கூறினார்.

Lion Wong என்ற ஃபேஸ்புக் கணக்கில் அந்த 14 வினாடி வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில், நெடுஞ்சாலையில் வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் காரின் கதவைத் திறந்து, ஒரு பெண் குதிக்கிறார்; குதித்த வேகத்தில் சாலையில் உருண்டுச் சென்றவரை, கொஞ்சம் தாமதித்திருந்தாலும் பின்னால் வந்த வாகனங்கள் மோதியிருக்கும்.

இந்நிலையில் தகவல் தெரிந்த பொது மக்கள் பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!