Latestமலேசியா

Star Tutor டியூஷன் மையத்தின் முதல் நேரடி விருது விழா; சிறந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கௌரவிப்பு

ஷா ஆலாம், ஜனவரி-19-Star Tutor டியூஷன் மையம், ஷா ஆலாம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் கடந்த சனிக்கிழமை, அதன் முதல் நேரடி விருது வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்தியது.

2021-ஆம் ஆண்டு தொடங்கிய Star Tutor நிறுவனம், இயங்கலை வகுப்புகள் மட்டுமல்லாமல், நேரடி செய்முறைப் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது.

படிவம் 4 முதல் 5 வரை படிக்கும் மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்; இதுவரை 12,000-க்கும் அதிகமான மாணவர்கள் Star Tutor மூலம் கல்வி பயின்று முன்னேறியுள்ளனர்.

இந்த முதல் நேரடி விருது விழாவில், மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

சபா, சரவாக், லங்காவி போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, சிலாங்கூர், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் கலந்துகொண்டார்.

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் தமிழரசு சுப்ரமணியம், NUETRA Sdn Bhd நிறுவனத்தின் தோற்றுநர் டத்தோ வீரா இளையராஜா சகாதேவன், NUETRA தலைமை செயலதிகாரி டத்தின் வீரா சுமித்ரா ராமசந்திரன் உள்ளிட்ட பிரமுகர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

Star Tutor இயங்கலை வாயிலாக நடத்திய Star Score Exam மூலம் சிறந்த மதிப்பெண் பெற்ற 350 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இது, Star Tutor நிறுவனர் ஆனந்தராஜ் தனது இயங்கலை மாணவர்களை முதல் முறையாக நேரில் சந்திக்கும் சிறப்பான தருணமாகவும் இருந்தது.

அவர் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

கடந்த 5 ஆண்டுகளில், Star Tutor இந்திய மாணவர்களுக்காக பல ஊக்க வகுப்புகள், தொழில் வழிகாட்டல் நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது.

2025-ஆம் ஆண்டு மட்டும் 33 மாணவர்கள் SPM மற்றும் பள்ளி தேர்வுகளில் A-க்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவர்களும் பெற்றோரும், Star Tutor‑ல் பயின்ற பின் தங்கள் முன்னேற்றத்தையும், கிடைத்த நன்மைகளையும் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.

ஆசிரியர்களும், தாங்கள் இயங்கலையில் கற்பித்த மாணவர்களை நேரில் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ம் விருது விழா நடத்தி, அவர்களை அங்கீகரித்த இந்நிகழ்வு பலரது பாராட்டைப் பெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!