
STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவி தொடர்பில் வாட்சப்பில் தற்போது வைரலாகி வரும் தகவலை பொது மக்கள் நம்பி ஏமாறக் கூடாது.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அவ்வாறுக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனாமதேய link இணைப்பை அது கொண்டுள்ளது; தெரியாமல் அதனை தட்டிப் பார்த்தால், முதலீட்டு மோசடி கும்பல் உள்ளிட்ட மூன்றாம் தரப்புகள் உங்கள் சுயவிவரங்களைத் திருடக் கூடும்.
வாட்சப்பையும் நீங்கள் பயன்படுத்த முடியாமல் போய்விடுமென அமைச்சர் எச்சரித்தார்.
எந்தவோர் அரசாங்க உதவிகள் குறித்த தகவல்களையும் பொது மக்கள் தொடர்புத் துறை அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
STR ரொக்க உதவிக்கான தகுதியை சரிபார்ப்பது மற்றும் அதனை எப்படி பெறுவது எனக் கூறி இரு நாட்களாக ஒரு link இணைப்பு வாட்சப்பில் வைரலாகி வருகிறது.