Latestமலேசியா

Sungai Chilling செல்ல மார்ச் முதல் பெர்மிட் தேவை

உலு சிலாங்கூர், ஜனவரி-25, உலு சிலாங்கூர், Sungai Chilling செல்ல விரும்பும் பொதுமக்கள், அங்கு HSK எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைய பெர்மிட் வைத்திருப்பது, மார்ச் 1 முதல் கட்டாயமாகும்.

நுழைவு பெர்மிட் தலா 5 ரிங்கிட் கட்டணத்தில் விற்கப்படும் என, சிலாங்கூர் காட்டு இலாகா இயக்குநர் Azhar Ahmad தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 500 பேர் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர் என்றார் அவர்.

Sungai Chiling காலை 8 மணி முதல் மாலை 6 மணி திறந்திருக்கும்.

HSK-வுக்குள் நுழைவதற்கான பெர்மிட்டுக்கு, ரவாங் பெர்டானா அரசாங்க வளாகத்தில் உள்ள உலு சிலாங்கூர் காட்டு இலாகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!